சினிமா
பிக் பாஸில் இருந்து வெளியேறிய சாச்சனா, RJ ஆனந்தி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸில் இருந்து வெளியேறிய சாச்சனா, RJ ஆனந்தி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பிக் பாஸ் 8ல் இந்த வாரம் இரண்டு Eviction என தெரியவந்ததும், போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஷாக்காக இருந்தது. நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களின் யார் அந்த இரண்டு பேர் வெளியேறப்போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று ஒளிபரப்பான எபிசோடில் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டனர். இந்த நிலையில், டபுள் Eviction-ல் சாச்சானா மற்றும் RJ ஆனந்தி இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வெளியேறிய இரண்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 63 நாட்களை கடந்துள்ளது. RJ ஆனந்தி ஒரு நாளைக்கு ரூ. 25,000 சம்பளமாக பெற்று வந்துள்ள நிலையில், 65 நாட்களுக்கு ரூ. 15 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார்.
சாச்சனா ஒரு நாளைக்கு ரூ. 20,000 சம்பளம் பெற்று வந்த நிலையில், 63 நாட்களுக்கு ரூ. 12 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.