சினிமா
விவாகரத்து, பிரேக்கப் பெண்கள் வாழ்க்கையில் சிறந்த தருணம்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி
விவாகரத்து, பிரேக்கப் பெண்கள் வாழ்க்கையில் சிறந்த தருணம்.. ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி
பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து இருந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவர் அதன் பிறகு நடித்த கட்டா குஸ்தி படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
நடித்தது குறைந்த அளவிலான படங்கள் என்றாலும் அவர் அதிகம் ரசிகர்களை ஈர்த்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் அடுத்து Hello Mummy என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அதன் ப்ரோமோஷனுக்காக கொடுத்த பேட்டியில் திருமணம் மற்றும் பிரேக்கப் குறித்து பேசியுள்ளார். அதில், “ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணமாக விவாகரத்து மற்றும் பிரேக்கப்பை பார்க்க வேண்டும்.
ஒரு இடத்தில் பெண்களுக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் விவாகரத்து அல்லது பிரேக்கப் செய்வது தவறு இல்லை. அதை பெண்கள் தடை என்று நினைக்காமல் வளர்ச்சியின் துவக்கப் புள்ளி என்று எண்ண வேண்டும்” என்று கூறியுள்ளார்.