சினிமா
நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார்.
பாலிவுட்டில் நுழைந்தது அவர் படங்களில் கவர்ச்சி காட்ட தொடங்கி இருப்பதும் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கீர்த்தி சுரேஷுக்கு இன்னும் சில தினங்களில் அவரது காதலர் ஆண்டனி உடன் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷை தமிழில் முக்கிய ஹீரோவான விஷாலின் குடும்பம் சில வருடங்களுக்கு முன் பெண் கேட்டு சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
சண்டக்கோழி 2 படத்தில் விஷால் உடன் கீர்த்தி ஜோடியாக நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷை எப்படியாவது விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என விஷாலின் பெற்றோர் முடிவெடுத்து அணுகி இருக்கின்றனர்.
கீர்த்தி சுரேஷுக்கு அதிகம் பழக்கமான இயக்குனர் லிங்குசாமி மூலமாக அணுகி கீர்த்தி சுரேஷை கேட்டிருக்கின்றனர். ஆனால் தான் ஏற்கனவே பல வருடங்களாக ஒருவரை காதலித்து வருவதாக கூறி விஷாலை அவர் ரிஜெக்ட் செய்து இருக்கிறார்.
இந்த தகவலை பிரபல நடிகர் சித்ரா லக்ஷ்மன் தனது லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறி இருக்கிறார்.