சினிமா
காதலர் உடன் ஒரு மாதம் முன்பே போட்டோ வெளியிட்டிருக்கும் கிர்த்தி சுரேஷ்.. இதை கவனித்தீர்களா
நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் தனது காதலரை திருமணம் செய்ய இருக்கிறார். 15 வருடங்களாக அவர் ஆண்டனி என்பவரை காதலித்து வருகிறாராம். அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற இருக்கிறது.
இன்று இன்ஸ்டாக்ராமில் காதலர் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது திருமணத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்.
கீர்த்தி சுரேஷ் எப்போதும் வெளிநாடுகள் செல்லும்போதும், ட்ரிப் செல்லும்போதும், தன் போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிடும் போதும் NYKE Diaries என குறிப்பிட்டு வந்தார்.
ஆண்டனி பெயரில் வரும் கடைசி இரண்டு எழுத்துகள் NY, கீர்த்தி பெயரில் வரும் முதல் இரண்டு எழுத்துகள் KE ஆகியவற்றை சேர்த்து தான் NYKE என அவர் பதிவிட்டு வந்திருக்கிறார்.
அவரது நாய்க்கு கூட NYKE என பெயரிட்டு இருக்கிறார் கீர்த்தி. அதனால் அது நாய் பெயர் என எல்லோரும் நினைத்து வந்தோம். ஆனால் அது உண்மையில் காதலர் பற்றிய குறியீடாக தான் இத்தனை நாள் கீர்த்தி பதிவிட்டு வந்திருக்கிறார்