சினிமா

பிரபல சீரியல் நடிகை நேஹாவிற்கு குழந்தை பிறந்தது… அவரே வெளியிட்ட போட்டோ

Published

on

பிரபல சீரியல் நடிகை நேஹாவிற்கு குழந்தை பிறந்தது… அவரே வெளியிட்ட போட்டோ

சின்னத்திரை ரசிகர்கள் தான் இப்போது இன்றைய இளைஞர்களின் கண்கள் என ஆகிவிட்டனர். சினிமா நாயகிகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்களிடம் அதிகம் மவுசு உள்ளது.

எனவே ஒரு தொடர் நடிக்க ஆரம்பித்து விட்டாலே அவர்கள் பெரிய அளவில் ரீச் ஆகிவிடுகிறார்கள்.

தற்போது சன் மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான ஒரு நடிகை பற்றிய நல்ல செய்தி தான் வந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண பரிசு, விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவன் கணேசன் என 2 தொடர்கள் மூலம் தமிழ் சின்னத்திரை மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகை நேஹா கௌடா.

சந்தன் என்பவருடன் திருமணம் செய்துகொண்ட இவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேஹாவிற்கு கடந்த அக்டோபர் 29ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை நடிகையே இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Exit mobile version