சினிமா
இலங்கையில் முதல் நாள் வசூலில் வேட்டையனை மிஞ்சிய அமரன், திரையுலகமே ஷாக்
இலங்கையில் முதல் நாள் வசூலில் வேட்டையனை மிஞ்சிய அமரன், திரையுலகமே ஷாக்
சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன்.
ராஜ்கமல் நிறுவனம் மூலம் கமல் ஹாசன் தயாரித்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள அமரன் படத்தின் வசூல் குறித்து விவரங்கள் வெளிவர துவங்கியுள்ளது.
அதன்படி, இலங்கையில் அமரன் படத்தின் வசூல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்சியுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இது தமிழ் சினிமாவிற்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.