சினிமா
முத்துவின் போனை திருடிய ரோஹினி செய்த செயல், அப்போது பிரச்சனை ஆரம்பம்… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
முத்துவின் போனை திருடிய ரோஹினி செய்த செயல், அப்போது பிரச்சனை ஆரம்பம்… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் தொடர்.
இப்போது கதையில் மனோஜ் தனது தொழிலுக்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்கிறார். அந்த பார்ட்டி மூலம் முத்துவால் மனோஜிற்கு ஆர்டர் கிடைக்கிறது, அதில் அண்ணாமலை மகன்கள் 3 பேரும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள்.
இதனால் கோபமான அண்ணாமலை 3 பேரையும் வீட்டிற்கு வெளியே படுக்க கூறுகிறார்.
காலையில் வீட்டிற்குள் வர முத்து தனது போனை தேடுகிறார். ரோஹினி உஷாராக மனோஜ் கோர்ட்டில் போட்டு வைத்த முத்து போனை எடுத்துவிடுகிறார்.
நாளை ஒளிபரப்பாக இருக்கும் எபிசோட் புரொமோ வெளியானது. அதில், ரோஹினி முத்துவின் போனை டுவிட்ச் ஆப் செய்துவிட்டு அந்த போனை சிட்டியிடம் கொடுக்க அவரது அலுவலகத்திற்கு செல்கிறார்.
சிட்டி, முத்து போன் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளார். அடுத்து என்ன நடக்கப்போகிறதோ, இயக்குனர் எப்போதும் வில்லன்களுக்கு சப்போட்டாகவே உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.