சினிமா

தவெக மாநாட்டிற்கு தளபதி விஜய் செய்த செலவு! இத்தனை கோடியா.. பிரபல நடிகர் சொன்ன தகவல்

Published

on

தவெக மாநாட்டிற்கு தளபதி விஜய் செய்த செலவு! இத்தனை கோடியா.. பிரபல நடிகர் சொன்ன தகவல்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அறிவித்தார். இதன்பின் கட்சியின் பாடல் மற்றும் கொடியை அறிமுகமப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து கடந்த 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் 8 லட்சம் மக்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் தலைவரான விஜய்யின் பேச்சு தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியுள்ளது.

இந்த நிலையில், பிரமாண்டமாக நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டிற்காக விஜய் எவ்வளவு செலவு செய்திருப்பார் என தகவல் ஒன்று உலா வருகிறது.

பிரபல நடிகரும், இயக்குனரான போஸ் வெங்கட், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “அரசியலில் 20 ஆண்டுகள் தாங்க வேண்டும் என்றால் சினிமாவில் நடித்து கொண்டே அரசியல் பண்ணிருக்கலாம். 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர், அவருடைய கோட் படத்தை குடும்பத்துடன் 4 முறை பாத்தேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்.

ஆனால் நாங்க ஓட்டு போட மாட்டோம். அரசியலில் நிற்பது என்பது சாதாரணமான விஷயம் இல்லை, செலவு பண்ணனும். மாநாடு என போறாரு, கோடிகளில் செலவு ஆகும்.

ரூ. 60 கோடி முதல் ரூ. 70 கோடி வரை செலவு ஆகும். சும்மா எல்லாம் கிடையாது. ஒரு படத்தில் வாங்கிய ரூ. 200 கோடியில் ஒரு மாட்டிற்கு ரூ. 60 கோடியை போடணும். 4 மாநாடு நடத்திட்டாரு, காசு இல்லாமல் போச்சுன்னா?” என பேசியுள்ளார்.

Exit mobile version