சினிமா

அதிரடி காட்டும் விஜய் சேதுபதி! பிக் பாஸ் 8 இன்றைய ப்ரோமோ

Published

on

அதிரடி காட்டும் விஜய் சேதுபதி! பிக் பாஸ் 8 இன்றைய ப்ரோமோ

பிக் பாஸ் 8ம் சீசன் தற்போது ஒரு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. போட்டியாளர்களாக வந்த 18 பேரில் ஒருவரை முதல் நாளே எலிமினேட் செய்துவிட்ட நிலையில், அடுத்து ஆண்கள் vs பெண்கள் என டாஸ்க் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்டென்ட் கொடுக்கிறேன் என சொல்லி சில போட்டியாளர்கள் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர். இருப்பினும் வீட்டில் சண்டை வருவதற்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள் தான்.

இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று சனிக்கிழமை ஷோவுக்கு வந்திருக்கிறார். போட்டியாளர்கள் கேம் விளையாட வந்திருக்கிறார்களா இல்லை பிக்னிக் வந்திருக்கிறார்களா என அவர் கோபமாக கேட்டிருக்கிறார்.

இந்த பஞ்சாயத்தை இன்று முடிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்து இருப்பதால் ஷோ பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version