24 66fd2ea209110
சினிமா

சிவகார்த்திகேயன் நிறுவனம் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த நடிகர்

Share

சிவகார்த்திகேயன் நிறுவனம் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி, தனது SK புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களின் படங்களை தயாரித்தும் வருகிறார்.

சமீபத்தில் சூரியின் கொட்டுக்காளி படத்தை அவர் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் SK புரொடக்ஷன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது பற்றி சிவகார்த்திகேயன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். “எங்கள் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் எந்தத் திரைப்படங்களுக்கும் காஸ்டிங் ஏஜெண்டுகள் நியமிக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிவிக்கிறோம்.”

“இதற்கு மாறாகத் தோன்றும் எந்த மின்னஞ்சல்கள், செய்திகள் அல்லது சமூக வலைதள பதிவுகளையும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.”

“சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பெயரை தவறாக அபயன்படுத்துவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 16
பொழுதுபோக்குசினிமா

தமிழகத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி: மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி வாழ்த்து

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. முதல்முறையாகத் தேர்தல் களத்தைக்...

world 4
சினிமாபொழுதுபோக்கு

தமிழக தேர்தல் களம்: தவெக முன்னிலையில் அதிரடி – விஜய்யை நேரில் சந்தித்து த்ரிஷா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தொடர்ந்து...

world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...