சினிமா
டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்
டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம்
அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் டிமான்ட்டி காலனி விமர்சனம் குறித்து இங்கே காண்போம்.
2015 ஆம் ஆண்டில் அருள்நிதி இறப்பது போல் முதல் பாகம் முடிந்திருக்கும். ஆனால், இந்த பாகம் அதனுடனேயே parallel ஆக பிரியா பவானி ஷங்கரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் காண்பிக்கப்படுகிறது. சீனிவாசன் (அருள்நிதி) மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருடைய அண்ணன் ரகுநந்தன் (இன்னொரு அருள்நிதி), தந்தையின் சொத்துக்களை அடைய தம்பி சாகவேண்டும் என்று முற்படுகிறார்.
அப்போது ஒரு காரணத்திற்காக சீனிவாசன் உயிரோடு இருக்க வேண்டும் என்று கூறி ரகுநந்தனை தடுக்கும் டெபி (பிரியா), அவருடன் இணைந்து டிமான்ட்டி காலனிக்கு அழைத்து செல்கிறார். அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான அமானுஷ்ய சம்பவங்களே டிமாண்டி காலனி 2-யின் விறுவிறுப்பான திரைக்கதை.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த தன் கணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்ற கேள்விக்கு டெபி விடைதேடி அலைகிறார்.
அதில் ஆரம்பிக்கும் மர்மம் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தொடர்வதில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. ரகு கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சுயநலவாதியாக வரும் அருள்நிதி, சில இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கவும் தவறவில்லை.
சாம் C.Sயின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். காட்சிக்கு காட்சி திகிலூட்ட அது உதவுகிறது. பாடல்கள் ஓகே ரகம். இடைவேளையிலேயே படம் முடிந்தது போன்ற உணர்வை முதல் பாதி தருகிறது.
அந்த அளவிற்கு இயக்குநர் கதையில் கவனம் செலுத்தி இருக்கிறார். படத்தில் பல ட்விஸ்ட்கள் ஒளிந்திருப்பது நம்மை சீட் எட்ஜில் அமர வைக்கிறது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பிரமாதம்.
டிமான்ட்டி காலனி 2: திரை விமர்சனம் | Demonte Colony 2 Movie Review
க்ளாப்ஸ்
விறுவிறுப்பான திரைக்கதை மிரட்டலான பின்னணி இசை நடிகர்களின் நடிப்பு
பல்ப்ஸ்
பெரிதாக ஒன்றும் இல்லை
மொத்தத்தில் திகிலான ஹாரர் படம் பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் இந்த டிமாண்டி காலனி 2.
ரெட்டிங் : 3.25