சினிமா
ஜமா படத்தின் விமர்சனம்.. படம் பார்த்தவர்களின் பதிவு
ஜமா படத்தின் விமர்சனம்.. படம் பார்த்தவர்களின் பதிவு
எதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தான் ஜமா. நேற்று ஆகஸ்ட் 2ஆம் தேதி மழை பிடிக்காத மனிதன், நண்பன் ஒருவன் வந்தபிறகு, பேச்சி, BOAT, ஜமா என பல திரைப்படங்கள் வெளிவந்தன.
இதில் மக்கள் மத்தியில் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது ஜமா. இப்படத்தை பாரி இளவழகன் என்பவர் இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக அம்மு அபிராமி நடித்துள்ளார்.
மேலும் சேத்தன், வசந்த் மாரிமுத்து, ஸ்ரீ கிருஷ்ண தயாள் என பலரும் நடித்துள்ளனர். தெருக்கூத்து கலைஞர்களை மையப்படுத்தி இப்படத்தை எடுத்துள்ளனர். நேற்று இப்படத்தில் முதல் ஷோவில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜமா.
இந்த நிலையில், இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கூறிய விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ், “தெருக்கூத்து கலைஞர்களின் மிக அழகான கதையை நமக்கு காட்டும் உண்மையான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் படம்” என தனது விமர்சனத்தை கூறியுள்ளார். மேலும் படக்குழுவிற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நடிகை நந்தினி என்பவர், “ஜமாவைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையும், அவர்களின் கலையின் மீதான அன்பும் அர்ப்பணிப்பும் மற்ற ஒவ்வொரு படைப்பாளியும் உணர்வுபூர்வமாக இணைக்கும் ஒன்று. இளையராஜா சாரின் இசை அதை வேறொரு நிலைக்கு உயர்த்தியது” என கூறியுள்ளார்.