சினிமா
’கோட்’ தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா? எத்தனை கோடி?
’கோட்’ தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கியது இந்த நிறுவனமா? எத்தனை கோடி?
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ படத்தின் தொழில்நுட்ப பணிகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பிசினஸ் சுறுசுறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஜீ டிவி வாங்கி இருப்பதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையின் வியாபாரமும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது தமிழக ரிலீஸ் உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
’கோட்’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ’கோட்’ படத்தை 70 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிறுவனம்தான் அஜித்தின் ’துணிவு’ படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது என்பதும், அதுமட்டுமின்றி கமல்ஹாசனின் ’இந்தியன் 2 ’ படத்தின் கர்நாடக ரிலீஸ் உரிமையையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.