சினிமா

ப்ரீ புக்கிங் வசூல் சாதனை படைக்கும் கல்கி 2898 AD.. முழு விவரம் இதோ

Published

on

ப்ரீ புக்கிங் வசூல் சாதனை படைக்கும் கல்கி 2898 AD.. முழு விவரம் இதோ

பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கல்கி 2898 AD. இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோன், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பாட்னி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

ஜூன் 27ஆம் தேதி வெளியாகவுள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் ஒப்பன் ஆகி பட்டையை கிளப்பி வருகிறது. USA-வில் இதுவரை ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் இதுவரை USA ப்ரீ புக்கிங்கில் 1 மில்லியன் டாலர்கள் வரை வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். இப்படம் வெளிவர இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் வசூல் சாதனை படைத்து வருகிறது என கூறப்படுகிறது.

Exit mobile version