சினிமா

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. உடலை கூட வாங்க வராத குடும்பத்தினர்! போலீஸ் செய்த விஷயம்

Published

on

பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை.. உடலை கூட வாங்க வராத குடும்பத்தினர்! போலீஸ் செய்த விஷயம்

சினிமா துறையில் இருபவர்களின் தற்கொலை தொடர்கதையாகி விட்டது. பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புட் தொடங்கி நடிகர் நடிகைகளின் தற்கொலை பட்டியல் நீளும்.

கஜோலின் The Trial என்ற சீரிஸில் நடித்து இருந்தவர் நடிகை நூர் மாலாபிகா தாஸ். அவர் Siskiyaan, Walkaman Upaya, Charamsukh போன்ற சீரிஸ்களிலும் நடித்து இருக்கிறார்.

அவர் கடந்த ஜூன் 6ன் தேதி வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். அவர் மும்பை லோகன்ட்வாலா பகுதியில் அவர் தங்கி இருந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் இருப்பவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வந்து பார்த்தபோது உடல் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறது. உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸ், தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது.

நூர் மாலாபிகாவின் குடும்பத்தை தொடர்புகொள்ள போலீஸ் முயற்சி செய்த நிலையில், அவர் குடும்பத்தினர் யாரும் உடலை வாங்க வரவில்லை.

அதனால் நடிகையின் உடலை போலீஸே NGO உதவி உடன் அடக்கம் செய்திருக்கின்றனர்.

Exit mobile version