சினிமா

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

Published

on

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறாரா சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி! வீடியோ பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் கைவசம் தற்போது இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இதில் அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், எஸ்.கே. 23 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இவருடைய ரிசப்ஷன் வீடியோ கூட விஜய் டிவியின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு பின் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கிய சிவகார்த்திகேயனுக்கு 2013ஆம் ஆண்டு ஆராதனா எனும் மகள் பிறந்தார். பின் கடந்த 2021ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஒரு மகனும் பிறந்தார். தனது தந்தை தனக்கு மகனாக பிறந்துள்ளதாக கூறி அவருக்கு குகன் தாஸ் என பெயர் சூட்டினார் சிவகார்த்திகேயன்.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்.

Exit mobile version