சினிமா

நடுரோட்டில் மைனா நந்தினி கண்முன் அவரது கணவரிடம் சண்டை, கைகலப்பில் ஈடுபட்ட கும்பல்… என்ன ஆனது, வைரலாகும் வீடியோ

Published

on

நடுரோட்டில் மைனா நந்தினி கண்முன் அவரது கணவரிடம் சண்டை, கைகலப்பில் ஈடுபட்ட கும்பல்… என்ன ஆனது, வைரலாகும் வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்.

மிகவும் பிரபலமான இந்த தொடரின் ஒரு பாகத்தில் நந்தினி மைனா என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மிகப்பெரிய ரீச் ஆக நந்தினிக்கு முன்பு மைனா அடைமொழியாக அமைந்துவிட்டது.

இப்போது சீரியல்கள், படங்கள், ரியாலிட்டி ஷோக்கள் என எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி தனது கணவர் யோகேஷ்வரனுடன் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென பைக்கில் வந்த இருவர் அவரது கணவருடன் நடுரோட்டில் சண்டை போட்டுள்ளனர்.

நந்தினியின் கார் அவர்களது பைக்கை இக்க வந்ததாக கூற சண்டை போட ஒரு கட்டத்தில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சமாதானத்திற்கு பிறகு யோகேஷ் காரை எடுக்க முயன்றபோது அந்த கும்பல் மைனா அருகே வந்து ஹாப்பி பர்த்டே என்று ஒரு மலரை கொடுத்துள்ளனர். இது அவரது பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட பிராங்க்காம்.

இந்த வீடியோவை அவரே தனது இன்ஸ்டாவிலும் வெளியிட்டுள்ளார்.

Exit mobile version