சினிமா

தகாத முறையில் தொட்ட நபர்.. விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை பேருந்தில் செய்த அதிரடி விஷயம்

Published

on

தகாத முறையில் தொட்ட நபர்.. விஜய் டிவி சக்திவேல் சீரியல் நடிகை பேருந்தில் செய்த அதிரடி விஷயம்

விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நடித்து வருபவர் அஞ்சலி பாஸ்கர். அந்த தொடரில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் இதுவரை அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையை சந்தித்தது இல்லை என கூறி இருக்கிறார். மேலும் படங்களில் வருவது போல ஒரு சம்பவம் தனது வாழ்க்கையிலும் நடந்து இருக்கிறது என கூறி இருக்கிறார்.

பெண்கள் பேருந்தில் செல்லும்போது சீண்டலில் ஈடுபடும் பலர் இருக்கிறார்கள். கஷ்டப்படும் குடும்பத்தில் இருந்து வந்த நான் பேருந்தில் தான் செல்வேன். அப்போது ஒரு நடுத்தர வயது நபர் என்னை தகாத முறையில் உரசிக்கொண்டிருந்தார்.

அந்த நபருக்கு ஒரு குத்து விட்டேன். அந்த நபர் இறங்கி சென்று விட்டார். ஆனால் எனக்கு ஆதரவாக அந்த பேருந்தில் இருந்த பெண்கள் கூட வரவில்லை என நடிகை அஞ்சலி பாஸ்கர் கூறி இருக்கிறார்.

Exit mobile version