சினிமா

நடிகர் விஜய்யின் தங்கை வித்யாவின் நினைவு இடம்.. வெளிவந்த புகைப்படம் இதோ

Published

on

நடிகர் விஜய்யின் தங்கை வித்யாவின் நினைவு இடம்.. வெளிவந்த புகைப்படம் இதோ

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 69. இப்படம் குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால் ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு வித்யா எனும் ஒரு தங்கை இருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அவர் சிறு வயதிலேயே உடலநல குறைவு காரணமாக இறந்துவிட்டார். இவருடைய மறைவு விஜய்யை அதிகளவு பாதித்துள்ளது என விஜய்யின் தாய் ஷோபா கூறியுள்ளார்.

வித்யாவின் மரணத்திற்கு பின் அனைவரிடமும் சுட்டி தனம் செய்து வந்த விஜய், அதன்பின் அப்படியே ஆளே மாறிவிட்டாராம். மிகவும் அமைதியான நபராக விஜய் மாறியதற்கு வித்யாவின் மரணம் முக்கிய காரணம் என தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று விஜய்யின் தங்கை வித்யாவின் நினைவு தினம். வித்யாவின் நினைவு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

Exit mobile version