சினிமா

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

Published

on

படப்பிடிப்பு துவங்கியவுடன் வசூல் வேட்டை.. OTT மட்டுமே இத்தனை கோடிகளுக்கு விற்றதா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் விடாமுயற்சி படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில், குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பை அஜித் துவங்கிவிட்டார்.

சமீபத்தில் தான் இப்படத்தின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருந்தனர். சர்ச்சைக்குள்ளான இந்த போஸ்டர் 24 மணி நேரத்தில் 41 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு மாபெரும் சாதனையும் படைத்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித் ரூ. 165 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் சண்டை காட்சிகளுடன் குட் பேட் அக்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், அப்படத்தின் OTT உரிமை குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை பிரபல OTT நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் ரூ. 95 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம்.

இதன்மூலம் படத்தின் பட்ஜெட்டில் கால்பங்கு படப்பிடிப்பின் போதே குட் பேட் அக்லீ திரைப்படம் வசூல் செய்துவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Exit mobile version