சினிமா

குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலத்துடன் நடனமாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.. வைரலாகும் வீடியோ

Published

on

குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலத்துடன் நடனமாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷுடன் தேவதையை கண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் 2009ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் ரியோ மற்றும் ஸ்ரீதேவி இடையே நடக்கும் நகைச்சுவையான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்த நிலையில், தளபதி விஜய்யின் கில்லி படத்தில் இடம்பெறும் அப்படி போடு பாடலுக்கு விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளரும் நடிகருமான ரியோவுடன் இணைந்து ஸ்ரீதேவி விஜயகுமார் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version