சினிமா

இளையராஜா – வைரமுத்து பிரச்சனை.. ஏ .ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தாக்கி பதிவிட்ட வீடியோ?

Published

on

இளையராஜா – வைரமுத்து பிரச்சனை.. ஏ .ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தாக்கி பதிவிட்ட வீடியோ?

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து ஆகியோர் பிரச்சனை பற்றி தான் தமிழ் சினிமா துறை பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறது.

வைரமுத்துவை வாயை பொத்திட்டு இருக்கனும் என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கொடுத்த பேட்டியும் சர்ச்சை ஆனது. மேலும் இளையராஜாவை தாக்கும் வகையில் வைரமுத்து போடும் ட்விட்டர் பதிவுகளும் சர்ச்சையை கொழுந்து விட்டு எரிய வைத்தது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். மறைந்த நடிகர் குமரிமுத்து பேசிய வீடியோ தான் அது.

‘தற்பெருமை வேண்டாம்’ என சொல்லும் நாலடியார் பாடலை தான் குமரிமுத்து அந்த வீடியோவில் கூறுகிறார்.

இளையராஜாவை தாக்கி தான் இப்படி ஒரு பதிவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

Exit mobile version