சினிமா

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு கிடைத்த பட வாய்ப்பு- யாருடைய படம் தெரியுமா?

Published

on

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் இலங்கை பிரபலத்திற்கு கிடைத்த பட வாய்ப்பு- யாருடைய படம் தெரியுமா?

விறுவிறுப்பின் உச்சமாக தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

இந்த தொடரில் தர்ஷினி திருமணத்தை நடத்த குணசேகரன் பல திட்டங்கள் போட அதனை பெண்கள் முறியடித்துவிட்டார்கள்.

இப்போது தங்களது சொந்த காலில் நிற்க துணிந்துவிட்டார்கள் குணசேகரன் வீட்டு பெண்கள்.

தற்போது ஞானம் சொந்தமாக தொழில் செய்ய போவதாக கதைக்களம் பயணிக்கிறது, அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது குணசேகரன் என்ன சூழ்ச்சி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.

இந்த தொடரில் கிருஷ்ணசாமி மெய்யப்பன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்ஜே நெலு.

இவருக்கு இலங்கை தான் சொந்த ஊர், சினிமா மீது உள்ள ஆசையால் சென்னைக்கு வந்தவருக்கு எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ் முக்கிய கேரக்டரில் நடித்த ரூத் படத்தில் நெலு ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version