சினிமா

முன்னணி நடிகை மிருணால் தாக்கூரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்

Published

on

முன்னணி நடிகை மிருணால் தாக்கூரின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா.. இதோ குடும்ப புகைப்படம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் ஒருவர் மிருணால் தாக்கூர். இவர் மராத்தி மொழியில் வெளிவந்த ஹெலோ நந்தன் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த மிருணால் தாக்கூருக்கு சீதா ராமம் திரைப்படம் தான் தென்னிந்திய அளவில் வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதிலும் இடம்பிடித்தார் மிருணால்.

இதை தொடர்ந்து தெலுங்கில் பிசியாக நடித்து வரும் மிருணால் தாக்கூர், நாணி உடன் இணைந்து Hi நானா திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் இவருக்கு சூப்பர்ஹிட்டாக, இதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த பேமிலி ஸ்டார் படம் தோல்வியை சந்தித்தது.

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் மிருணால் தாக்கூரின் சொந்த குடும்பம் குறித்து பலரும் தெரியாது. இந்த நிலையில், மிருணால் தாக்கூர் தனது தாய், தந்தை மற்றும் சகோதரன் மற்றும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது

Exit mobile version