சினிமா
முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு
முதல்வரை முடிவு செய்ய நீ யார்? நடிகர் அனுமோகனிடம் கேள்வி எழுப்பிய போதை நபரால் பரபரப்பு
அதிமுக தேர்தல் பரப்புரையின் போது நடிகர் அனுமோகனிடன் போதையில் இருந்த நபர் எழுப்பிய கேள்வியால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவிற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் திகதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதில் தமிழகத்திற்கான தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இதனால், அதிமுக, திமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து நட்சத்திர பேச்சாளர்களான திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், நடிகர் அனுமோகன், நடிகர் ரங்கநாதன் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அவர்கள் பிரச்சாரத்தில் பேசுகையில், “தமிழகத்தில் அனைத்து வரி உயர்வுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே காரணம். நீட் தேர்வுக்கு விலக்கு தருவதாக கூறி ஒவ்வொரு முறையும் வாக்குறுதி தருகிறார்கள். ஆனால், பல குடும்பங்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்” என்றனர்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி ஒருவரே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்க தகுதி வாய்ந்தவர் என நடிகர் அனுமோகன் பேசினார். அப்போது, போதையில் இருந்த நபர் ஒருவர் என்னுடைய முதலமைச்சரை தேர்வு செய்ய நீ யார் என்று அனுமோகனிடம் கேள்வி எழுப்பினார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அதிமுக கட்சித் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து குடிமகனை அப்புறப்படுத்தினர். இதன்பின்னர், அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க தொடங்கினர்.