சினிமா

பிக்பாஸ் பிரபலத்திற்கு லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசளித்த அஜித்- யாருக்கு என்ன கொடுத்துள்ளார் பாருங்க

Published

on

பிக்பாஸ் பிரபலத்திற்கு லட்சம் மதிப்புள்ள பொருளை பரிசளித்த அஜித்- யாருக்கு என்ன கொடுத்துள்ளார் பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அஜித்.

துணிவு படத்தை தொடர்ந்து பைக் டூர் சென்றவர் தற்போது தனது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

படத்தின் படப்பிடிப்பு முதலில் அஜர்பைஜானில் நடந்து வந்தது. அங்கு படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய அஜித் மற்றும் ஆரவ் வீடியோ வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

இப்போது மீண்டும் ஒரு சின்ன பைக் டூரில் உள்ளார்.

பைக் பிரியரான அஜித், ஒரு நிறுவனம் தொடங்கி பைக் டூர் செல்ல விரும்புவர்களுக்கும் பயிற்சி கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் தன்னுடன் நடிக்கும் ஆரவ்விற்கு ரூ. 35 லட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் பைக் குழுவினர்களில் ஒருவராக ஆரவ் இருப்பதால் அவருக்கு இப்படியொரு சர்ப்ரைஸ் கிடைத்துள்ளதாம்.

ஆரவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் பங்குபெற்று டைட்டில் ஜெயித்தது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version