சினிமா
5 மாநிலங்களில் அரசியல் செய்ய விஜய் முடிவு.. தேசிய கட்சியாக மாற்ற முயற்சியா? சீமான் நிலைமை வந்துவிடக்கூடாது..!
5 மாநிலங்களில் அரசியல் செய்ய விஜய் முடிவு.. தேசிய கட்சியாக மாற்ற முயற்சியா? சீமான் நிலைமை வந்துவிடக்கூடாது..!
நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியை அவர் தேசிய கட்சியாக மாற்ற முடிவு செய்திருப்பதாகவும் குறைந்த பட்சம் ஐந்து மாநிலங்களில் தனது கட்சியை வளர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் கட்சியை நடத்தினால் அது ஒரு மாநில கட்சி என்ற முத்திரை குத்தப்பட்டு விடும் என்பதும் ஒரே சின்னம் பெறுவதில் சிக்கல் இருக்கும் என்பதால் குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து மாநிலங்களில் அரசியல் செய்தால், தேர்தல் ஆணையம் தாங்கள் கேட்கும் சின்னம் தரும் என்ற முடிவில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் அரசியல் செய்வதால் தான் சீமான் சின்னம் பறிபோனது என்றும் அந்த நிலைமை தனக்கு வந்து விடக்கூடாது என்பதற்காக விஜய் தேசிய கட்சியாக தனது கட்சியை மாற்ற திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவிலும் விஜய்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதும் அதேபோல் கர்நாடக மாநிலத்திலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை மனதில் வைத்து தான் விஜய் தனது அரசியல் கட்சியை தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் புதுவை யூனியன் பிரதேசத்திலும் பரப்ப அவர் முயற்சி செய்வதாகவும் இதனை அடுத்து அவர் தேர்தல் ஆணையத்திடம் தேசிய கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.