சினிமா

ஓவர் ஆட்டிட்யூட் .. கோடிகளில் சம்பளம்.. அனிருத்தை ஒதுக்கும் இயக்குனர்கள்.. தேவிஸ்ரீ பிரசாத் காட்டில் மழை..!

Published

on

ஓவர் ஆட்டிட்யூட் .. கோடிகளில் சம்பளம்.. அனிருத்தை ஒதுக்கும் இயக்குனர்கள்.. தேவிஸ்ரீ பிரசாத் காட்டில் மழை..!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் ஆட்டிட்யூட் காரணமாக அவருக்கு பல படங்கள் வாய்ப்பு நழுவி சென்று கொண்டிருப்பதாகவும் இதனை அடுத்து தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய் ,அஜித் உட்பட பல முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அனிருத் தான் இசையமைப்பாளராக இருந்து வருகிறார் என்பதும் அவருடைய இசை என்றாலே படம் நல்ல விலைக்கு வியாபாரம் ஆவதால் அவரது கால்ஷீட்டை பெற்ற பிறகுதான் படத்தின் பூஜை நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நான் கடந்த சில ஆண்டுகளாக அனிருத் பாடல்கள் கொடுப்பதற்கு மிகுந்த காலதாமதம் எடுத்துக் கொள்கிறார் என்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ஆட்டிட்யூட் காட்டுகிறார் என்றும் அதுமட்டுமின்றி அவருடைய சம்பளம் தற்போது மிக அதிகமாக உயர்ந்துள்ளதை அடுத்து அவரால் படத்தின் பட்ஜெட்டும் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து தான் தற்போது இயக்குநர்கள் அனிருத்தை விட்டு விட்டு தேவிஸ்ரீ பிரசாத் பக்கம் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான அஜித், தனுஷ், விஷால் உள்ளிட்டவர்களின் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் நடிக்க இருக்கும் ’குட் பேட் அக்லி’, ‘தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ விஷால் நடித்து வரும் ’ரத்தினம்’ ஆகிய படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து வருகிறார்.  மேலும் சில பிரபலங்களின் படங்களை இசையமைக்க அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

அனிருத் இதே ரீதியில் தனது ஆட்டிட்யூட் காண்பித்தால் கண்டிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் மாறி விடுவார் என்றே கூறப்பட்டு வருகிறது. அவரது எளிமை, நியாயமான சம்பளம் மற்றும் சொன்ன நேரத்துக்கு பாடல்களை கம்போஸ் செய்து கொடுப்பது ஆகியவையே அவரை நோக்கி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சென்று கொண்டிருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Exit mobile version