சினிமா

யூடியூப் பிரபலமான இர்ஃபானை சினிமா பிரபலங்களும் நாடுவது ஏன்? அவரே சொன்ன விளக்கம்

Published

on

யூடியூப் பிரபலமான இர்ஃபானை சினிமா பிரபலங்களும் நாடுவது ஏன்? அவரே சொன்ன விளக்கம்

சினிமா துறை, டிவி துறையில் இருப்பவர்களுக்கு இணையாக தற்போது Youtube பிரபலங்களும் அதிகம் ரசிகர்களை கொண்டிருகிறார்கள். அப்படி ஹோட்டல் வீடியோக்கள் வெளியிட்டு பாப்புலர் ஆனவர் இர்ஃபான்.

அவரது Irfan’s view என்ற சேனல்களுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சினிமா நட்சத்திரங்களையும் அவர் பேட்டி எடுத்து வருகிறார்.

பல்வேறு ஊர்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சுவைத்து அதனை ரிவ்யூ செய்து வீடியோவாக யூடியூப் சேனல் பதிவிட்டு சம்பாதித்து வருபவர்களில் பிரபலமானவர் தான் இர்ஃபான்.

இர்ஃபானுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது. ஆசிபா என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு, ஆர்.என். ரவி தன் வீட்டுக்கு அழைத்து விருந்தும் கொடுத்திருந்தார். இவ்வாறு பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி காணப்படுகிறார் இர்ஃபான்.

இந்த நிலையில், தற்போது youtube பிரபலமான இர்ஃபானை சினிமா பிரபலங்களும் நாடி வருவது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் பிரபல சேனலுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு உணவகம் ஒன்றில் மேலாளராக வேலை செய்தேன். அப்போது வாரத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் வேலையை விட்டுவிட்டு முழு நேர யூடியூபராக மாறினேன்.. வீட்டில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பொருளாதார நெருக்கடி அதிகரித்தது. இவை அனைத்தையும் சரி செய்ய உழைத்தால் மட்டும் முடியும் என்பதை நம்பி கடினமாக உழைத்தேன்.. காலையில் ஆட்டோ ஓட்டினேன். மாலையில் கல்லூரி படிப்பையும் தொடர்ந்தேன்.

அதன் பிறகு யூடியூபில் இவ்வளவு பணம் சம்பாதிக்கலாம் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு நடிகராய் இருந்தாலும் கூட எனக்கு இவ்வளவு பேர் கிடைத்திருக்காது. ஆனால் யூடியூபராக எனக்கு ஒரு மேடை கிடைக்கும், அதில் விருதுகள் கிடைக்கும் என்பதை எல்லாம் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

இப்போது நான் எங்கு சென்றாலும் மக்களிடையே எனக்கு ஒரு வரவேற்பு இருக்கிறது. பள்ளி கல்லூரிகளில் விருந்தினராக அழைக்கிறார்கள்.  யூடியூப் குறித்து பாடம் எடுக்கச் சொல்கிறார்கள். மக்கள் எனக்கு அங்கீகாரம்  வழங்கியதாக உணர்கிறேன்.

மேலும் அதிகமாக உணவு சாப்பிடுவதால் சில நேரங்களில் உணவு ஒவ்வாமை ஏற்படுகிறது. இதனால் இரண்டு மருத்துவமனைக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளேன். அங்கு சிகிச்சை எடுக்கும் போது கிடைக்கும் ஓய்வை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறேன்.

இப்போது படத்தில் நடித்தவர்கள் கூட நம்மை தேடி வந்து நேர்காணலில் பங்கேற்பது நன்றாக இருக்கிறது. youtube இல் ஆரம்ப காலத்தில் சினிமா ட்ரெய்லர்கள், விமர்சனக்காரர்கள் மட்டுமே கொண்டிருந்தது. தற்போது சினிமா கலைஞர்களை யூடியூபில் பார்க்க வந்தவர்களால் தான், எங்களைப் போன்றவர்களையும் கவனிக்க தொடங்கினார்கள் என்பது தான் உண்மை.. என்று கூறியுள்ளார்.

Exit mobile version