சினிமா
லோகேஷ் கனகராஜை எச்சரித்த விஜய்யின் தந்தை.. சொல்லியும் கேட்கவில்லை, வெச்சு செய்த சம்பவம்
லோகேஷ் கனகராஜை எச்சரித்த விஜய்யின் தந்தை.. சொல்லியும் கேட்கவில்லை, வெச்சு செய்த சம்பவம்
திரையுலகில் மூத்த இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு படத்தின் விழா ஒன்றில் கலந்துகொண்டார். இந்த விழாவில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சி இளம் தலைமுறை இயக்குனர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.
இதில் “நான் ஒரு இயக்குனருக்கு போன் கால் செய்து பேசினேன். அப்போது அவருடைய படத்தின் முதல் பாதி சூப்பராக இருக்கும் அருமையாக இருக்கு என கூறினேன். அப்போது அவர் என்னிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தார். இரண்டாம் பாதி சற்று தொய்வு ஆக இருக்கு அதை சரி செய்யலாமே.
நீங்கள் படத்தில் காட்டிய மதத்தில் அப்படிப்பட்ட மூடநம்பிக்கை எல்லாம் ஒன்றுமே இல்லை. தந்தையே தனது பிள்ளையை பலி கொடுப்பது போல் காட்டியுள்ளீர்கள். அப்படியெல்லாம் அந்த மதத்தில் இல்லை என கூறும் போது, சார் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என கூறிவிட்டு போன் கால் கட் செய்துவிட்டார்.
அந்த படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே அப்படத்தை பார்த்துவிட்டேன். அதன்பின் நான் கூறியதை வைத்து படத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், நான் சொன்னதை அந்த இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. படம் வெளிவந்த பின் அனைவரும் அப்படத்தை வெச்சு செய்தார்கள்” என பேசினார்.
எஸ்.ஏ.சி-யின் இந்த பேச்சு இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி தான் என ரசிகர்கள் கூறி வருகிறார். ஏனென்றால் அவருடைய லியோ படத்தில் தான் தந்தை, மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருந்தது. மேலும் படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு இரண்டாம் பாதி சரியில்லை என எஸ்.ஏ.சி கூறினாராம்.
அதே போல் லியோ படம் வெளிவந்தபின் அப்படத்திற்கு அனைவரும் கூறிய அதிகபட்ச விமர்சனம் இரண்டாம் பாதி சரியில்லை, தொய்வாக இருக்கிறார் என்பது தான். தனது மகன் படமாக இருந்தாலும் கூட எஸ்.ஏ.சி வெளிப்படையாக கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.