சினிமா

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

Published

on

மறைந்தும் பசி போக்கும் கேப்டன் விஜயகாந்த்.. அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தினமும் அன்னதானம்

விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகவுள்ள நிலையில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணத்தால் உயிரிழந்தார். இவரது மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாத பல திரைப் பிரபலங்கள், தே.மு.தி.க தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மறைந்து நாளையுடன் 30 நாட்கள் ஆகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் விஜயகாந்த் சமாதியில் 50,000 பேர் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளதாக தேமுதிக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக் கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படுகிறது. இதனை பலரும் சாப்பிட்டு வருகின்றனர்.

விஜயகாந்தை யார் பார்க்க வந்தாலும் முதலில் சாப்பிட்டு விட்டீர்களா என்று தான் கேட்பார். அவரின் கொள்கை படியே அன்னதானம் வழங்கப்படுவதாக தே.மு.தி.க.வினர் கூறுகின்றனர்.

Exit mobile version