சினிமா
என்ன அர்ச்சனா இப்படி சொல்லிட்டிங்க… மக்கள் எதற்காக உங்களை வின்னராக்க வேண்டும்?
பிக் பாஸ் 7ஆவது சீசன் இப்போது இறுதி வாரத்தில் உள்ளது.இதனால் போட்டியாளர்களிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய திருப்பத்துடன் வருகிறது, மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது.
தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ரூ 1 லட்சம் தொடக்கத் தொகையுடன் கேஷ் பாக்ஸ் திருப்பத்தை அறிவித்தனர். இதில் பூர்ணிமா ரவி கேஷ் பாக்ஸ் தொகையான ரூ. 16 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியிருந்தார். இந்நிலையில் மக்களிடம் குறைவான வாக்கு பெற்றார் என்ற அடிப்பையில் விசித்ரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் ஆட்டம் சூடு பிடித்திருக்கென்றே சொல்லலாம். காரணம் பிக் பாஸ் ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கின்றார். இந்த வாரம் பினாலே வாரம் என்பதனால் நீங்க எல்லாருமே நேரடியாக நாமினேஷனில் இருப்பீங்க. நீங்க எல்லாருமே கன்பிரசன் ரூமுக்கு வந்து உங்களுக்கு எதுக்காக மக்கள் வாக்களிக்கணும் என்றதுக்காக சொல்ல போறிங்கனு பிக் பாஸ் சொல்லியிருந்தார்.
அதற்கு எல்லாரும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி கொண்டார்கள்.முதலில் தினேஷ் உள்ள போறாங்க. தினேஷ் கூறியது,நான் முழுக்க முழுக்க என்ன மட்டுமே நம்பி வந்தனன் ஆனா வீட்டுக்குள்ள சில பேர் பல விஷயங்களை செய்திட்டு வந்திருக்காங்க. அதெல்லாம் நான் செய்யாம வந்ததால மக்கள் என்னை வின்னராக்கணும் என்று தினேஷ் கூறியிருந்தார்.
தினேஷை தொடர்ந்து விஜய் மக்களை பார்த்து சொல்றாரு, தொடக்கத்தில நான் ஒரு தப்பு செய்து யெல்லோவ் கார்ட் வாங்கி அத திருத்தி கொள்றதுக்குள்ள வெளிய போய்ட்டன். மறுபடியும் எனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைச்சு இன்னைக்கு 100 ஆவது நாள் இங்க நிக்கிறன். அதுக்காகவே நீங்க என்ன வின்னராக்கணும் என்று விஜய் சொல்லறாரு.
விஜயை தொடர்ந்து அர்ச்சனா மக்களை பார்த்து சொல்றாங்க,இந்த வீட்டுக்குள்ள எல்லாருமே சுயநலமாக இருக்கும் போது நான் மட்டும் தான் பொது நலமாக மக்களுக்காக கேள்வி கேட்டிருக்கன். அதோட நிறைய பேர் வைல் கார்டாக வருபவர்கள் வின்னராக வரவே முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்காங்க அதுக்காகவே நான் வின்னரகனும் என்று அர்ச்சனா மக்களை பார்த்து சொல்றாங்க.
அர்ச்சனாவை தொடர்ந்து மாயா மக்களை பார்த்து சொல்றாங்க,இந்த வீட்டுக்குள்ள நியாயத்துக்காக நிறைய போராடியிருக்கன். நான் இங்கயே நிறைய குரல் கொடுக்கிறன் நீங்க என்ன வின்னராக்கினீங்க என்றால் நான் வெளிய வந்தும் உங்களுக்காக நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுப்பன் அப்பிடீன்னு சொல்லீருக்காங்க