சினிமா
இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல்: தீவிரமடையும் போர் நடவடிக்கை
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை 3 மாதங்களை நிறைவு செய்ய உள்ளது.
ஹமாஸ் படைகளை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவரை இந்த போர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 21, 800 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காசாவில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் திடீர் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.
இதற்கிடையில் வடக்கு இஸ்ரேல் பகுதி நோக்கி ஈரான் ஆதரவு படையினர் ட்ரோன் தாக்குதலை நடத்தினர்.
இதனை இஸ்ரேலிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் மீதான இந்த தாக்குதலின் மூலம் போர் நடவடிக்கையானது உச்சக்கட்டத்தை நெருங்கி வருகிறது.