சினிமா

பிக் பாஸ் வீட்டில் இறுதியாக எலிமினேட்டான நிக்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? லட்சங்களை கொத்தாக அள்ளிய கில்லாடி

Published

on

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பிக்கும் போது மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் நிக்சன், ரவீனா. எனினும் இந்த வாரம் இடம்பெற்ற டபுள் எவிக்‌ஷனில் எலிமினேட்டான இருவரின் சம்பள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களைக் கடந்த நிக்சனின் சம்பளம் எவ்வளவு என பார்ப்போம் வாங்க.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசனில் அதிகளவில் சர்ச்சையில் சிக்கிய போட்டியாளராக வலம் வந்தவர் நிக்சன். இவருக்கு ஒரு எபிசோடுக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

அதாவது, பிக்பாஸ் வீட்டில் 90 நாட்களாக தங்கியிருந்த நிக்சனுக்கு, ரூ.10 லட்சத்து 80 ஆயிரம் சம்பளமாக கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, ரவீனாவுக்கு ஏற்கனவே சொன்னது போல, ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபா சம்பளமாக பேசப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version