சினிமா
பிக் பாஸில் ஒரு எபிசோடுக்கு இவ்வளவா? 90 நாட்களைக் கடந்த ரவீனாவின் மொத்த சம்பள விபரம்!
பிக் பாஸ் சீசன் 7 இல் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு, தற்போது 89 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 7 இல் போட்டியாளர்களாக பங்குபற்றியவர்கள் தான் மணி, ரவீனா. இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வர முதலே பிரபலமான ஜோடியாக விஜய் டிவியில் வலம் வந்தார்கள். இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் ஜோடியாக பங்கேற்றனர்.
எனினும், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீனா எலிமினேஷன் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ரவீனாவின் சம்பள விபரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு, ஒரு எபிசோடுக்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.