சினிமா

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

Published

on

விஜய்க்கு ஜோடியாகும் விக்ரமின் ரீல் மகள்.. இருவருக்கும் 16 வயது வித்தியாசம்

விக்ரமின் கெரியரில் தி பெஸ்ட் திரைப்படங்களில் ஒன்று தெய்வத்திருமகள். இப்படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் தான் சாரா அர்ஜுன்.

இவர் பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகள் ஆனார். தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து சைவம் படத்திலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் சில ஆண்டுகள் கழித்து பொன்னியின் செல்வன் சிறு வயது ஆதித்த கரிகாலனின் காதலியாக நந்தினியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்காக அவருக்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், 18 வயதாகும் நடிகை சாரா அர்ஜுன், 34 வயதாகும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தில் அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடிக்கிறாராம். இப்படத்தை கெளதம் என்பவர் இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version