tamilni Recovered Recovered scaled
சினிமாசெய்திகள்

” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?

Share

” 2026-ல் கப்பு முக்கியம் பிகிலு”- தேர்தலை மறைமுகமாக அறிவித்தாரா விஜய்?

லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்தில், நடிகர் விஜய் ”2026-ல் கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் கூறியது 2026 சட்டமன்ற தேர்தலை குறிக்கிறதா என்று சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17 ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.

இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றியதை தொடர்ந்து விழாவில் கடைசியாக நடிகர் விஜய் பேசினார்.

விஜய் கூறியதாவது
தளபதி என்று ரசிகர்கள் தன்னை அழைப்பதற்கான அர்த்தம் ”தளபதி என்றால் உங்களுக்கு கீழ் வேலை செய்கிற தளபதி நான். மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்” என்று விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து விஜய்யிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது, அப்போது 2026 என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ” 2025 க்கு அப்றம் வர வருஷம் என்ன? உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டி நடக்கப் போகுது. இன்னும் சீரியஸாவா… 2026 கப்பு முக்கியம் பிகிலு” என்று பதில் அளித்தார்.

2026-ல் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில் அதை மனதில் வைத்துதான் விஜய் 2026 இல் கப்பு முக்கியம் பிகிலு என்று கூறியதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...