சினிமா
இதுவரை பார்த்திராத மிரட்டலான புதிய லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்
இதுவரை பார்த்திராத மிரட்டலான புதிய லுக்கில் நடிகர் ரஜினிகாந்த்
TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் தலைவர் 170. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
கடந்த மூன்று நாட்களாக இப்படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்களின் அறிவிப்பு ஒன்றின்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில், தலைவர் 170 படத்திலிருந்து ரஜினியின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இதுவரை பார்த்திராத மிரட்டலான லுக்கில் இருக்கிறார் ரஜினிகாந்த்.
மேலும் இன்று முதல் தலைவர் 170 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என இந்த போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.