சினிமா

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்… அட இவருமா… அதிர்ச்சியில் ரசிகர்கள்

Published

on

நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்… அட இவருமா… அதிர்ச்சியில் ரசிகர்கள்

நேற்றைய தினம் 18போட்டியாளர்களுடன் கோலாகமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன்-7 ஆனது ஆரம்பமே அதகளம் என்று கூறுமளவிற்கு அட்டகாசமான டுவிஸ்ட்டுகளுடன் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் இன்றைய தினம் வெளியான முதல் ப்ரோமோவில் 6போட்டியாளர்களை இன்னொரு வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள். அதனையடுத்து வெளிவந்த இரண்டாவது ப்ரோமோவில் அந்த 6பேருக்கும் பல விதிமுறைகளை விதித்திருந்தனர்.

தற்போது 3ஆவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு நாமினேஷன் process இருக்கிறது என்று பிக்பாஸ் கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்களை நாமினேஷன் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

பின்னர் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களை இவ்வாறு மாறி மாறி நாமினேஷன் செய்ய வேண்டும் எனவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்கின்றனர்.

அந்தவகையில் கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் பாவா செல்லத்துரையை நாமினேட் செய்கின்றனர். அதேபோன்று ஜோவிகா ஐஷுவை நாமினேட் செய்கின்றார். ஐஷு ஜோதிகாவை நாமினேட் செய்கின்றார். மறுபுறம் ரவீனா ஜோவிகாவை நாமினேட் செய்கின்றார். நிக்சன் பிரதீப் ஆண்டனியை நாமினேட் செய்கின்றார். மேலும் பாவா செல்லத்துரை கூல் சுரேஷை நாமினேட் செய்கின்றார். யாருமே எதிர்பார்க்காத வகையில் பாவா செல்லத்துரை கூல் சுரேஷை நாமினேட் செய்துள்ளமை ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Exit mobile version