சினிமா
மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த சந்திரமுகி 2
மூன்று நாட்களில் வசூலை வாரிக்குவித்த சந்திரமுகி 2
சந்திரமுகி 1 மாபெரும் வெற்றியை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 உருவானது.
பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 கடந்த 28ஆம் தேதி திரைக்கு வந்த கலவையான விமர்சனங்களை பெற்றது.
முதல் பாகத்தை அப்படியே ரீமேக் செய்து வைத்துள்ளார்கள் என்று விமர்சனம் இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சந்திரமுகி 2 திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது. இனி வரும் நாட்களிலும் நல்ல வசூல் வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.