சினிமா

சிம்புவுடன் இணையும் கே.ஜி.எப் நட்சத்திரம்.. செம மாஸ் கூட்டணி

Published

on

சிம்புவுடன் இணையும் கே.ஜி.எப் நட்சத்திரம்.. செம மாஸ் கூட்டணி

கடந்த ஆண்டு வெளிவந்து ரூ. 1500 கோடியை கடந்து வசூல் செய்த திரைப்படம் கே.ஜி.எப் 2. மாபெரும் வசூல் சாதனை படைத்த இப்படத்தின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்தாலும், இப்படத்தின் இசையும் மிகமுக்கிய காரணமாக.

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர்

ஆம், கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப் 2 படங்களுக்கு ரவி பஸ்ரூர் என்பவர் தான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரை அப்படியே அலேக்காக தூக்கி தமிழ் படத்திற்கு இசையமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

ஆம், சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்.டி. ஆர் 48. இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு முதலில் அனிருத் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் கால்ஷீட் கேட்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர் அடுத்த 6 மாதத்திற்கு பிசியாக இருப்பதன் காரணமாக இப்படத்தில் கமிட்டாக முடியவில்லை. இதனால் அவருக்கு பதிலாக இப்படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை இப்படத்தில் கமிட் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

ஏறக்குறைய இது உறுதியாகவிடம் என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் நடந்தால் கண்டிப்பாக எஸ்.டி.ஆர் 48 படத்தின் இசை வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Exit mobile version