சினிமா

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி

Published

on

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள் – நடிகை விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள் என நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

சீமான் விவகாரம் தொடர்பாக பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீதுள்ள புகாரை நான் நிரூபிப்பேன். புகாரை வாபஸ் வாங்க ரூ.50 ஆயிரம் எனது வங்கிக் கணக்கில் போட்டார்கள். பால சுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை சாட்டை துரைமுருகன் அனுப்பி வைத்தார். புகாரை வாபஸ் வாங்கிவிட்டு அக்காவுடன் போக சொன்னார்கள்.

சாட்டை துரைமுருகனிடன் பேசிய உரையாடல்களை பார்த்தால் சீமான் என்னுடன் பேசியது தெரியவரும். இதில் நான் பொய் சொல்வதாக சீமான் என்னை சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கு வராது” எனக் கூறினார்.

சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், அவர், என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும், சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சீமான் தன்னை போல 6 பேர் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறினார். இந்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் அவரது வழக்கறிஞரும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

மேலும், சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் மீது விஜயலட்சுமி எழுத்துபூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார்.

Exit mobile version