சினிமா
படம் ஓடாது என கூறிய விஜய்.. ஆனால் சூப்பர்ஹிட்டானது
படம் ஓடாது என கூறிய விஜய்.. ஆனால் சூப்பர்ஹிட்டானது
தளபதி விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் திரைப்படங்களும், சில தோல்வி திரைப்படங்களும் வெளிவந்துள்ளது. இதில் விஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஒரு திரைப்படம் மாபெரும் ஹிட்டாகியுள்ளது.
தெலுங்கில் 1996ல் வெளிவந்த படம் தான் பவித்ர பந்தம். இப்படத்தில் வெங்கடேஷ் மற்றும் சௌந்தர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை பார்த்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார்.
படத்தை விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார். ஆனால், விஜய் இது ஹீரோயின் சப்ஜெக்ட் படமாக இருக்கிறது ஓடாது என கூறியுள்ளார். பின் தனது தந்தையின் பேச்சை மீறமுடியாத காரணத்தினால் அப்படத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம்
லால் சலாம் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் கேட்ட சம்பளம் எவ்ளோ தெரியுமா?.. இதோ முழு விவரம்
படம் வெளிவந்து முதல் நாள் சரியாக ஓடவில்லை. விநியோகிஸ்தர்கள் படத்தை திரும்பி வாங்கி சென்று விட கூறி இருக்கிறார்கள்.
உடனடியாக சந்திரசேகர் தன்னுடைய PRO-வை அழைத்து, பிரிந்து சேர்ந்த தம்பதிகள் 10 பேரை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார். அவர்களை விஜயின் முன் அழைத்து வந்து மாலை மாற்றிக்கொள்ள சொல்லி அதை ப்ரோமோஷனாக வைத்து படத்தினை ஓட்டி இருக்கிறார். படமும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. அப்படம் தான் பிரியமானவளே.