இந்தியா
கனடாவில் தொடங்கப்படும் விஜய் பயிலகம்! விஜயின் திட்டம்
கனடாவில் தொடங்கப்படும் விஜய் பயிலகம்! விஜயின் திட்டம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியை தொடர்ந்து கனடா நாட்டில் செப்டம்பர் 9 ஆம் திகதி விஜய் பயிலகம் தொடங்கப்பட உள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி சில மாதங்களாக இருந்து கொண்டு தான் இருக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வரும் விஜய், கண் தான திட்டம், குருதி கொடை, குழந்தைகளுக்கு பால், ரொட்டி வழங்கும் திட்டம் போன்ற உதவிகளை செய்து வருகிறார்.
கடந்த ஜூன் 17ஆம் திகதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த 1600 மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் நின்று பொன்னாடை போர்த்தி, சான்றிதழ் வழங்கினார்.
மேலும் விழாவில் பேசிய விஜய், மாணவர்களிடம் ஓட்டுக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறுங்கள் என்ற பேச்சும் பேசுபொருளானது.
இதனையடுத்து, ஜுலை 15 ஆம் திகதி காமராஜர் பிறந்த நாளில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயில ‘தளபதி விஜய் பயிலகம்’ என்னும் இரவுநேர பாட சாலை திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 10 இடங்களில் தொடங்கப்பட்ட விஜய் பயிலகம் தற்போது 127 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கனடா நாட்டில் உள்ள தமிழர்களின் குழந்தைகளின் படிப்புக்காக செப்டம்பர் 9 ஆம் திகதி விஜய் பயிலகம் தொடங்கப்பட உள்ளது. அங்கு, விஜய் மக்கள் இயக்க தலைவராக இருக்கும் கார்த்திக் தலைமையில் தொடங்கப்பட இருக்கிறது.
முதன்முதலாக 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இந்த வகுப்புகள், சனி, ஞாயிறுக் கிழமைகளில் மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை நடைபெறும்.
முதன்முதலில் ஓன்லைனில் தொடங்கப்படுவதாகவும், பிறகு தனியாக பயிற்சி வகுப்புகளில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிலகத்தில், முதற்கட்டமாக 20 குழந்தைகள் பயிலகத்தில் சேர பதிவு செய்துள்ளனர்.