சினிமா
போட்டுக்க துணிகூட இல்லை – நெகிழ வைத்த பிக்பாஸ் இசைவாணி
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி சுவாரசியமான அனுபவங்களுடன் முன்னேறி வருகிறது.
இன்றைய நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளிவந்துள்ள நிலையில் அதில் சென்டிமன்ட் காட்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
கடந்த சீசன்களில் சென்டிமன்ட் காட்சிகள் ரசிகர்களை நிகழ்ச்சியோடு ஒன்றித்து வைக்க உதவியது.
இம்முறை சீசன் ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே சென்டிமன்ட்காட்சிகள் ஆரம்பித்து விட்டன.
இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில், இசைவாணி தனது குடும்பத்தின் கடந்த கால அனுபவங்களையும் கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளது தெரியவருகின்றது.
இசைவாணி தான் கடந்து வந்த வாழ்க்கை பாதை குறித்து கூறியபோது,
‘தனது தந்தையார் துறைமுகத்தில் வேலை பார்த்து வந்ததாகவும் திடீரென அவருக்கு வேலை போய்விட்டதால் மிகவும் கஷ்டமாக வாழ்க்கை இருந்ததென்றும், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலை இருந்ததாகவும் கூறுகிறார்.
தனக்கு நிறைய துணிகள் போட வேண்டும் என்ற ஆசை. ஆனால் அணிந்துகொள்ள நல்ல துணி கூட இல்லாமல் கஷ்டப்பட்டேன். ஒரு வேளை சாப்பாட்டு தான் வீட்டில் இருக்கும். அந்த சாப்பாட்டை தான் சாப்பிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய அப்பா அதனை சாப்பிடாமல் வைத்து விடுவார் என்றும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
அத்தோடு கஷ்டப்படுவதை கஷ்டப்பட்டு கொண்டே இருப்போம் என்று நினைக்க வேண்டாம். என்றைக்காவது ஒருநாள் வாழ்க்கை மாறும்’ என திரைப்பட பஞ்ச் டயலாக் போல பேசியுள்ளார்.
#Day2 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #Vijaytelevision pic.twitter.com/lqUrT1w4RG
— Vijay Television (@vijaytelevision) October 5, 2021
You must be logged in to post a comment Login