சினிமா
வெளியானது ஷாருக் – நயன் படத்தின் டைட்டில்! – வைரலாகும் ஆதாரம்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில்.பொலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் படத்தில் ப்ரியாமணியும் இணைந்து நடிக்கின்றார்.
இதேவேளை. இந்தப் படத்தில் தளபதி விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என தெரிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு.
தற்போது படத்தின் தலைப்பு தொடர்பான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மும்பை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படிப்பிடிப்பு நடத்துவதற்காக அனுமதி கேட்டு எழுதப்பட்ட கடிதம் ஒன்றிலேயே படத்தின் தலைப்பு ‘லயன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத கடிதத்தின் மூலம் படத்தின் தலைப்பு உறுதியாகியுள்ளது எனரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இந்தப் படத்தின் போஸ்டர் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் எனவும் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது படக்குழு.
You must be logged in to post a comment Login