24
சினிமாபொழுதுபோக்கு

கவினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Share

விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் அப்படியே படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அடித்த அட்ராசிட்டியால் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இதனால் லிஃப்ட் படத்தில் ஹீரோவாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகி ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அண்மையில் வெளியாகிய டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.இப்படத்தை் தொடர்ந்து இவர் யாருடைய படத்தில் நடிக்கப் போகின்றார. என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. அதன் படி டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இதுதவிர மேலும் சில இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ளாராம் கவின். இந்நிலையில் கவின் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

சீரியல்களில் நடித்தபோதே லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த கவின், இப்போது கோடிகளில் கமிட்டாகி வருகிறாராம்.அதன்படி, லிஃப்ட், டாடா படங்களின் வெற்றிக்குப் பின்னர் ஒரு படத்துக்காக 1.5 முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி வரை வருமானம் கிடைக்கிறதாம்.

இதனடிப்படையில் கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல், சென்னையில் ஒரு பிளாட் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர சொந்தமாக ஒரு கார் வைத்துள்ளார் கவின்.

டாடா படத்தின் வெற்றிக்குப் பின்னர் கவினின் மார்க்கெட் வேல்யூ கூடியுள்ளதால், இனிவரும் நாட்களில் அவரின் சம்பளம், சொத்து மதிப்பு ஆகியவை அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டு வருவதையும் காணலாம்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...