சினிமா

இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி சொத்து மதிப்பு.. இத்தனை கோடியா?

Published

on

தமிழ் சினிமாவில் இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்ட்டாக இருந்து இசையமைப்பாளராக மாறியவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இதன்பின், மீசையா முறுக்கு படத்தின் மூலம் ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார். ஹீரோவாகவும், இசையமைப்பாளராகவும் கலக்கிக்கொண்டிருந்த ஹிப் ஹாப் ஆதி சில வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கி படிப்பில் கவனம் செலுத்தினார்.

பின் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஆதிக்கு PT sir எனும் ஹிட் திரைப்படம் கிடைத்துள்ளது. மேலும் இசையமைப்பாளராக அரண்மனை 4 என்ற ப்ளாக் பஸ்டர் படத்தை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது 35 – வது பிறந்தநாளை கொண்டாடும் ஹிப் ஹாப் ஆதி சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஒரு படத்திற்கு இசையமைக்க ஆதி, ரூ. 3 கோடி முதல் ரூ. 7 கோடி வரை சம்பளம் பெருகிறாராம். அந்த வகையில், இவருக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 15 கோடி வரை சொத்துக்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

Exit mobile version