சினிமா
ஜீ.வி.பிரகாஷ் – சைந்தவி விவாகரத்திற்கு நான் காரணமா? முதன்முறையாக மனம் திறந்த திவ்யபாரதி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், வளர்ந்து வரும் நடிகராகவும் இருந்து வருபவர் ஜீ.வி.பிரகாஷ்.
இவர் தனது சிறு வயது தோழியும், பாடகியுமான சைந்தவியை காதல் திருமணம் செய்து கொண்டார். 10 வருடங்களுக்கு மேல் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் கடந்த வருடம் திடீரென விவாகரத்தை அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தனர்.
இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையிலும் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் இணைந்து கச்சேரிகளில் பங்கு பெற்று வருகின்றனர்.
ஒரு புறம் இவர்கள் பிரிவுக்கு நடிகை திவ்யபாரதி தான் காரணம் என்று சோஷியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முதன் முறையாக இது குறித்து பேட்டி ஒன்றில் ஜீ.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி பகிர்ந்துள்ளனர்.
அதில், ” ஜீ.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு பின் என்னை பலர் டார்கெட் செய்து திட்ட தொடங்கிவிட்டனர். பெண்களே அதிகம் திட்டி வருகின்றனர். அதையெல்லாம் கேட்கும் போது கடினமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அதை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.