சினிமா
தமிழ்நாட்டில் இதுவரை விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க

தமிழ்நாட்டில் இதுவரை விடாமுயற்சி படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? இதோ பாருங்க
கடந்த வாரம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் விடாமுயற்சி. அஜித் நடிப்பில் உருவான இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார்.
யதார்த்தமான கதைக்களத்தில் உருவான இப்படம் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. ஆனால், மக்களின் பேராதரவுக்கு முன் இந்த விமர்சனங்கள் நிற்கவில்லை.
முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வரும் விடாமுயற்சி படம், 8 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடாமுயற்சி திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 87 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 100 கோடி மயில்களை தமிழகத்தில் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.